×

செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலை பணியால் பள்ளத்திற்கு சென்ற அரசு மாணவர்கள் விடுதி: நுழைவு வாயிலை மாற்றி அமைக்க கோரிக்கை

சின்னாளபட்டி: செம்பட்டி-ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலை பணியால் அரசு மாணவர்கள் விடுதி பள்ளத்திற்கு சென்றது. எனவே விடுதி  நுழைவு வாயிலை மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரம் வரை உள்ள சாலைகள் நான்குவழி சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. கன்னிவாடியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் விடுதி வழியாக சாலை செல்கிறது. நான்குவழி சாலைக்காக சாலையை உயர்த்தும்போது மாணவர் விடுதி பள்ளத்திற்கு சென்றுவிட்டது.

இதனால் விடுதியில் இருந்து சாலைக்கு வர மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர் விடுதியில் வடக்கு புரத்தில் செல்லும் சாலையில் நுழைவு வாயிலை மாற்றி கொடுத்தால் சிரமமின்றி விடுதிக்கு செல்ல முடியும் என மாணவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டபோது, விடுதியின் வடக்குபுறம் கீழ் மேலாக பாதை உள்ளது. இந்தப்பாதையை இடத்து உரிமையாளாடம் கேட்டு, விடுதியின் நுழைவுவாயிலை மாற்றி அமைக்க உள்ளோம் என்றார்.


Tags : Chembatty-Otansatram , Sembatti-Ottanchatram road project destroyed government students' hostel: request to change the entrance gate
× RELATED 2024 – 2025ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு